ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் விசாரணைக் கைதியை காவல் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸுக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கடந்த 2014-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்தவர் காளிதாஸ். இவர் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த செய்யது முகம்மது (24). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் மீது திருட்டு புகார் வந்தது. இதையெடுத்து அவரை விசாரிக்க செய்யது முகம்மதுவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.
அவரிடம் காளிதாஸ் விசாரணை நடத்தியபோது கத்தியால் கொலை செய்யும் நோக்கத்தில் செய்யது முகம்மது தாக்க வந்ததாகவும் அதனால் தன்னை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கியால் அவரை சுட்டதாகவும் கூறப்பட்டது. மார்பில் குண்டு பாய்ந்த செய்யது முகம்மது சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது இறந்தார்.
இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கொலை வழக்குபதிவு செய்து விசாரிக்க வேண்டும் என செய்யது முகம்மது தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து காளிதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த காளிதாஸ் பணியிடை நீக்கத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் மீண்டும் பணியில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக்காப்பகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தது. அந்த அபராதத் தொகையை செய்யது முகம்மதுவின் தாயாரிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையெடுத்து காளிதாஸ் இந்த வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸுக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…