இந்தியவா.? ஹிந்தியவா.? ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்.! மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம்.!
ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் செய்தியை பகிர்ந்ததை விமர்சனம் செய்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவீட் செய்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி சுவெங்கடேசன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இது ஹிந்தியவா? இந்தியாவா? ஹிந்தி திணிப்பை கைவிடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
அதாவது, இந்திய ரயில்வே துறை தனது டிவிட்டர் பக்கத்தில், ரயில்வே ஆட்சேர்பு தொடர்பாக யாரிடமும் ஏமாற வேண்டாம். அது உங்களை தகுதியற்றவர்களாக மாற்றிவிடும்’ என பொதுவான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் அதனை முழுக்க ஹிந்தியில் எழுதி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தான் எம்பி சு.வெங்கடேசன் டிவீட் செய்துள்ளார். அதில், ‘ ரயில்வேயின் அந்த ட்வீட் இந்தியில் இருக்கிறது. அதற்கான பொருள் தெரிய வேண்டும் என்றால் கூகுள் உதவியை தான் நாட வேண்டும். ரயில்வே வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கானதா? அல்லது ஹிந்தியாவுக்கானதா? மொழிபாரபட்சத்தை கைவிடுங்கள். ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்.’ என அதில் டிவீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டும் இந்தியில்… பொருள் அறிய “கூகுள்” உதவியை தேடனும்.
ரயில்வே வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கானதா?
அல்லது
ஹிந்தியாவுக்கானதா?மொழிபாரபட்சத்தை கைவிடுங்கள்
ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள். pic.twitter.com/mzNQStEBCa— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 27, 2022