மோடி அரசின் மெகா ‘மொய்’ – சு.வெங்கடேசன் எம்.பி கடும் விமர்சனம்!

Su Venkatesan : இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஆனந்த் அம்பானி – ராதிகாவின் ப்ரீ வெட்டிங் விழா கோலாகலமாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த நிறுவனர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் என பலரும் படையெடுத்து வருகின்றனர்.

Read More – அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு படையெடுத்த உலக பிரபலங்கள்.! ஸ்பெஷல் அந்தஸ்து பெற்ற உள்ளூர் ஏர்போர்ட்.!

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் அனைவரும் தனி விமானங்கள் மூலம் ஜாம்நகரில் உள்ள உள்ளூர் விமான நிலையம் வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த சூழலில் ஜாம்நகர் விமான நிலையம் என்பது உள்ளூர் விமான சேவை வழங்கி வந்த நிலையில், தற்போது அம்பானியின் மகன் திருமணத்தால், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Read More – மேலும் ஒரு பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹா விலகுவதாக அறிவிப்பு!

ஜாம்நகர் விமான நிலையத்தில் சர்வதேச வருகையை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெறும் உள்ளூர் விமான சேவை வழங்கி வந்த நிலையில், அம்பானி மகன் திருமண நிகழ்வை முன்னிட்டு தற்போது சர்வதேச விமானங்கள் பல அங்கு குவிந்து வருகிறது. இதனால், ஜாம்நகர் விமான நிலையம் ஸ்பெஷல் அந்தஸ்து பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.

Read More – ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம்.! கோடியில் புரண்ட வெளிநாடு பாடகர்கள்…

அந்தவகையில், மோடி அரசின் மெகா பொய் என்று மதுரை சு.வெங்கடேசன் எம்பி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அவரது எக்ஸ் வலைதள பதிவில், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.

6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi