10 ஆம் வகுப்பு தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாணவர்கள் 9.45 க்கு வரவேண்டும்.
காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதையடுத்து 10 ஆம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், 10 ஆம் வகுப்பு தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாணவர்கள் 9.45 க்கு வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும், இன்று முதல் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…