இனி கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் நிலை வராது – அமைச்சர் செங்கோட்டையன்.!
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூரில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
- பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி வராது என கூறினார்.
நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூரில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் ,ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புள்ளி விபரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் விரைவில் துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி வராது எனவும் தமிழகத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் முன்னேற்றத்திற்கு ரூ.78 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் 75% பெண் ஆசிரியர்கள் உள்ளதால் தேர்வெழுதும் மாணவிகள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.