நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை
ஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே வருவதால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூருக்கு ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது எனவும், ஏற்கனவே இ-பாஸ் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற 24-ஆம் தேதி ஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது.இதனால் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதாவது, ஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை காட்டினால் மாணவர்களை இ-பாஸ் இன்றி அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.