இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 27-ம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி, தேர்வு எழுதிய 9,39,829 லட்சம் மாணவ, மாணவிகளும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வில் மொத்தமாக மாணவர்கள் 4,71,759 பேரும் , மாணவிகள் 4,68,070 பேரும் தேர்வு எழுதினார்.
வழக்கமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெறுவார்கள். ஆனால் , இந்த வருடம் அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததால் மாணவர்கள் வரலாற்றில் முதல் முறையாக மாணவிகளை முந்தி உள்ளனர்.
மாணவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவு, எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆகஸ்ட் 17 முதல் 21-ஆம் தேதி வரை பள்ளியிலேயே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…