கிணற்றில் விழுந்த மாணவர்கள்.. காப்பற்ற சென்ற மூவர் உள்பட 4 பேர் உயிரிழப்பு!
நாமக்கல் மாவட்டம் கணவாய்பட்டியில், கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழப்பு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 மாணவர்கள் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளனர். கணவாய்ப்பட்டியில் கிணற்றில் மூழ்கிய 3 மாணவர்களை காப்பாற்ற, அருகில் இருந்த 3 பேர் கிணற்றில் குதித்துள்ளனர். பைக்கில் சென்றபோது கிணற்றில் விழுந்த 3 மாணவர்களில் 2 பேர் கிணற்றில் இருந்து மேலே வந்துவிட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பற்ற சென்ற 3 பேரும் மூச்சு திணறி உயிரிழந்தனர் சம்பவம் நடைபெற்றுள்ளது. காப்பற்ற சென்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலத்த காயத்துடன் நிதிஷ்குமார் மற்றும் அபினேஷ் காப்பாற்றப்பட நிலையில், மாணவன் விக்னேஷ் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவரை மீட்க 3 பேர் முயன்றபோது, 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.