முன்னாள் ரூட் தல திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த மாணவர்கள்.! பின்னர் நடந்த விபரீதம்.!

- பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண விழாவில் மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் கலந்துகொண்டு, அதனை மணமக்கள் கையில் கொடுத்து கேக் வெட்டி, அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதுபோன்று, நிகழ்வு கடந்த வாரத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, குறிப்பிடப்படுகிறது.
சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண விழாவில் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் மணமகன் கூட படித்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, மணமக்கள் மேடையில் ஏறிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டாக்கத்தியை மணமகன் மற்றும் மணமகள் கையில் கொடுத்து கேக் வெட்ட சொல்லி அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து, மண மேடையில் புது தம்பதியினர் மற்றும் மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் நடனமும், ஆடியிருக்கின்றார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதுபோன்று, நிகழ்வு கடந்த வாரத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டு சிறைல் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய மாப்பிள்ளை மற்றும் தூண்டிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025