புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளை அப்பகுதி இளைஞர்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.அதில் அம்புலி ஆற்றில் காமராஜ் காலத்தில் கட்டப்பட்ட அணை ஓன்று பரம்பரிப்பு இன்றி உள்ளது.அந்த அணையையும் தற்போது அப்பகுதி இளைஞர்கள் சீரமைத்து வருகின்றனர்.
இந்த தூர்வாரும் பணிக்காக பல்வேறு தரப்பினர் தங்களால் முடித்த பண உதவி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கொத்தமங்கலம் மேற்கில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் மாணவ ,மாணவிகள் தங்கள் உண்டியலில் சேமித்து வைத்து இருந்த ரூ 10,000 தூர்வாரும் பணிக்காக கொடுத்து உதவினார்.
இந்த தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் கடந்த 70 நாள்களாக அம்புலி ஆறு அணைக்கட்டு ,கொடிக்குளம் ,பெரியகுளம் ஆகிய நீர்நிலையங்களை தூர்வாரி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…