நீட் தேர்வை மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்-தமிழிசை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், ரஜினி, சூர்யா, திருமாவளவன் ஆகியோர் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறார்கள். கால அவகாசம் இருப்பதால் வரைவில் எது பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கலாம்.
அரசியல் செய்வதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கெயில், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து வருகின்றனர். நீட் தேர்வை மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியினர் நீட்தேர்வை வைத்து அரசியல் செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.