மாணவர்களே…இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகம்:மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக கீழ்க்காணும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில்,அண்மையில் பெய்த கனமழையால் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள்,சாலைகள் என பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனால்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மற்றும் மாவட்டத்தில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல,திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (22.11.2021) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.