மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை : கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரகள், கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி விட்டு, தற்போது நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக் கோரி முழக்கமிட்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் செமஸ்டர் 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…