காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரலானதையடுத்து 6 பேர் சஸ்பெண்ட்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள் குளிர்பானத்தில், சாராயத்தை கலந்து அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இந்த வீடியோ அக்கல்லூரி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, வீடியோவில் மதுபானம் அருந்தும் கல்லூரி மாணவிகளிடம் கல்லூரியின் முதல்வர் விசாரணை மேற்கொண்டார். அப்போது, அதே வகுப்பறையை சேர்ந்த மாணவன் ஒருவர் தங்களுக்கு மதுபானம் வாங்கித் தாந்ததாகவும், மது என்று தெரிந்தே அருந்தியதாகவும் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, மது அருந்திய மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து கல்லூரி முதல்வரை கண்டித்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு மாணவன் மற்றும் 5 மாணவிகள் உட்பட ஆறு பேரை முதல்வர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளார்.
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…
சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…
சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய…
இலங்கை : இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவமிக்க பேட்ஸ்மேனுமான டிமுத் கருணாரத்னே தனது 36வது வயதினிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து…
ரியாத் : AFC சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ…
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…