மாணவர்கள் இந்த கயிறுகளை கைகளில் கட்டக் கூடாது – தேனி மாவட்ட அலுவலர்
மாணவர்கள் சாதி அடையாளத்தை குறிப்பிடும் வகையில் வண்ணக் கயிறுகளை கைகளில் கட்டக் கூடாது தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாகவும் அதன் மூலம் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் மற்றும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்தின் பொழுதும் அனைவரோடும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாகவும் தெரிய வருகிறது.
எனவே, மாணவர் நலன் கருதி தலைமையாசிரியர்கள் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி மாணவர்களுக்கு இதனால் ஏற்படும் விளைவுகளை காலை பிரார்த்தனைக்குக் கூடும் பொழுது எடுத்துக் கூறிடுமாறும், அவ்வாறு சாதிப் பிரிவினையைத் தூண்டுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனமாணவர்களை எச்சரித்திடுமாறும் இவ்வகையான கயிறு அணிவதை தடுக்குமாறும் அனைத்துவகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும், மெட்ரிக் பள்ளி, முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.