மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்க வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
- மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்கவேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் ஒன்றுதான் இலவச மடிக்கணினி திட்டம்.தற்போது இந்த திட்டம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆணையில், 2017-18, 2018-19 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்கவேண்டும்.மாணவர்களிடம் Bonafied Certificate பெற்றுக்கொண்டு மடிக்கணினி வழங்க வேண்டும் .இந்த உத்தரவின்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும் +2 தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கும், உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கும் மடிக்கணினி இல்லை என்றும் தெரிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை.