மாணவர்கள் கடும் அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு! முழு விவரம்..
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் உயர்வால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ஒரு தாளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.150-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300-ஆக இருந்த தேர்வுக்கட்டணம் தற்போது ரூ.450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.650-ஆகவும், இதுபோன்று முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை (ஒரு தாளுக்கு) சமர்ப்பிப்புக்கு ரூ.600-ஆக இருந்த கட்டணம் ரூ.900-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… நாளை சட்டமன்ற சிறப்புக் கூட்டம் – பாஜக நிலை என்ன?
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புக்கான டிகிரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 லிருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த 50% தேர்வுக் கட்டணம் உயர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து, வலியுறுத்தி வருகின்றனர். ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2050 கட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.