டெல்லி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்! தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்!
- குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய டெல்லி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
- இந்த தாக்குத்துதலுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
அந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டத்தை தொடர்ந்து தமிழகத்திலும் போராட்டம் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஐஐடியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதே போல கோவையிலும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்களும் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.