தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்!
உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல பள்ளி, கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கிளை சார்பாக பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது..
திண்டுக்கல் RMTC நகர் பகுதியில் சேக்ரட் ஹார்ட் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் – நத்தம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து 2வது நாளாக இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல பள்ளி, கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவர் சங்கத்தின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக
திருப்பூர் புது பேருந்து நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது..
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கல்லூரி முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், கட்டண உயர்வைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தமிழக அரசின் பேருந்து கண்டனத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பிவருகின்றனர்
தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், கட்டண உயர்வைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் திரு.வி.க கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவர் சங்கத்தின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தமிழக அரசின் பேருந்து கண்டனத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பிவருகின்றனர்.
கரூரை அடுத்த தான்தோன்றிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்து கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கல்லூரி நுழைவு வாயிலில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் – துறையூர் சாலையில், குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவ-மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாகச் சென்ற அவர்கள் சத்தியமங்கலம் – அத்தாணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுப் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகள் 2ஆவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குந்தவை நாச்சியார் கல்லூரி முன்பு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தரையில் அமர்ந்த அவர்கள் பேருந்து கட்டண விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உத்தரவை திரும்பக்கோரி கல்லூரி முன்பு திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கோட்டூரில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கிராம மக்கள் உள்ளிட்டோர் தேனி – மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.
பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து 2வது நாளாக இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல பள்ளி, கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மேலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவர் சங்கத்தின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது .
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …