தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958 இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) 1925 இடங்களும் உள்ளன.அந்த வகையில் மொத்தம் 8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான அறிவிப்பாணை 19 ஆம் தேதி (இன்று) வெளியாகிறது என்றும், அதன்படி,எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே, மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.
அதே சமயம்,தமிழகத்தில் ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல்,நீலகிரி, திருப்பூர்,நாமக்கல், திருவள்ளூர்,நாகப்பட்டினம்,கிருஷ்ணகிரி,அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12 ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.பிரதமர் அவர்கள், விருதுநகரில் நடைப்பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று காலை 10 மணி முதல் தொடங்கியுள்ளது. மேலும்,மருத்துவம் பயில விருப்பம் உள்ள மாணவர்கள் https://tnmedicalselection.net/Notification.aspx அல்லது https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளங்களில் ஜனவரி 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…