மாணவர்களே..மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் – Apply செய்து விட்டீர்களா?..!

Default Image

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958  இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) 1925 இடங்களும் உள்ளன.அந்த வகையில் மொத்தம் 8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான அறிவிப்பாணை 19 ஆம் தேதி (இன்று) வெளியாகிறது என்றும், அதன்படி,எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே, மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.

அதே சமயம்,தமிழகத்தில் ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல்,நீலகிரி, திருப்பூர்,நாமக்கல், திருவள்ளூர்,நாகப்பட்டினம்,கிருஷ்ணகிரி,அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12 ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.பிரதமர் அவர்கள், விருதுநகரில் நடைப்பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று காலை 10 மணி முதல் தொடங்கியுள்ளது. மேலும்,மருத்துவம் பயில விருப்பம் உள்ள மாணவர்கள் https://tnmedicalselection.net/Notification.aspx அல்லது  https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளங்களில் ஜனவரி 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்