சக மாணவனுடன் மது அருந்திய மாணவிகள்.. பெற்றோரை கலங்க வைக்கும் சம்பவம்.. கல்லூரியிலிருந்து நீக்கம்.. இதுகுறித்து பதிலளிக்க தேசிய மகளீர் ஆணையம் உத்தரவு..

- தமிழகம் தற்போது நாகரீக வளர்ச்சியில் சிறந்த நிலையை அடைந்து வருகிறது.
- இதில் சகித்துக்கொள்ள முடியாத பல சம்பவங்களும் அடங்கும்.
இதேபோல் ஒரு சம்பவம் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான கலை கல்லூரியிலும் நிகழ்ந்துள்லது. இந்த மாணவிகள் தங்கள் சக மாணவனுடன் இணைந்து மது அருந்துவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட மூன்று மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் என நான்கு பேரையும் கல்லூரியில் இருந்து நீக்கியது கல்லூரி நிர்வாகம்.
இதற்கு எதிராக தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கம் சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் தருமபுரம் ஆதினம் கல்லூரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், 30 நாட்களுக்குள் பதிலளிக்கும்படியும் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ‘மேயும் மாட்டை நக்கும் மாடு கெடுக்கும்’ என்ற பழமொழிக்கு இணங்க மாணவ சமுதாயத்தை கெடுக்கும் வகையில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் மானவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கருதுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025