குஷியில் மாணவர்கள்..! இன்று முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை…!

Class 1-9 Holiday

இன்று முதல் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறை 

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு  இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதியும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியும் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களின் இறுதித் தேர்வுகளையும் 28 ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அனைவருக்கும் இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்