தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று, முடிவடைந்தது. வழக்கமாக அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்ககை காரணமாக விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றியாளர்களை அறிவிக்கப்பட்டது. அதனால் வரும் ஜனவரி 6-ம் தேதி நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில், பள்ளிகளுக்கு செல்லும் முதல் நாளே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது. இது ஏற்கனவே முடிவெடுத்திருந்ததால், இதில் எந்த மாற்றமும் இல்லாமல் தேர்வை நடத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் நெருக்கடியில் உள்ளனர்.
மேலும் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், அடுத்த வாரம் வழங்கப்பட்ட பின் பாடத்திட்டங்களை முடித்து, பின்னர் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய சூழ்நிலை காரணமாக ஆசிரியர்களும் நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…