தண்ணீரின்றி தவிக்கும் தமிழகம் !மரக்கன்று நட்டால் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்-அமைச்சர் செங்கோட்டையன்
மரக்கன்று நட்டால் மாணவர்களுக்கு 2 மதிப்பெண் வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தண்ணீருக்காக தவித்து கொண்டிருக்கிறது.போதிய மழை இல்லாத காரணத்தாலும்,அணைகளில் நீர் வற்றியதால் மக்கள் குடி தண்ணீருக்காக தவித்து வருகின்றனர்.தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளகர்ளை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,மாணவர்களிடம் கட்டணம் பெறுவதால் குடிநீரை தனியார் பள்ளிகளே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். மரக்கன்று நட்டால் மாணவர்களுக்கு 2 மதிப்பெண் வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.