பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிலையில், விஜயகாந்த் அறிக்கை.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வரக்கூடிய சூழ்நிலையில், இதனை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தது. இந்த நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘சென்னை பல்கலைகழகம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 13
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் வேந்தராக முதலமைச்சரை ஏன் நியமிக்ககூடாது ஆளுநரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றப்படும் சட்ட திருத்த மசோதா சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் துணை என படி முன்னாள் முதல்வர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் காலத்தில் இருந்தே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வரும் மரபை தொடர்வதே சிறந்தது. இந்த நடைமுறையை உடனே மாற்றுவது என்பது இலகுவானது அல்ல என்றும், இந்தியா முழுவதும் என்ன நடைமுறை உள்ளதோ, அதே நடைமுறை தமிழகத்திலும் தொடர்ந்தால் அனைவருக்கும் நல்லது.
ஏற்கனவே நீட் விவகாரத்தில் இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிக பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அதேபோன்று துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்திலும் குழப்பமான சூழ்நிலை ஏற்படுத்தாமல் தமிழக அரசு ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள அதிகார போட்டியில், மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கவோ, கேள்விக்குறியாக்கவோ கூடாது.
மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்பவர்களை தவிர்த்து, ஊழல் இல்லாத நேர்மையான துணை வேந்தர்களை நியமித்தால் மட்டுமே, பல்கலைக்கழகங்களும்
மாணவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு, என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…