மாணவியின் மீது ஆசிட் வீசிய இளைஞன்!மிகவும் மோசமான நிலைமைக்கு மாறிய மாணவியின் குடும்பம்!

Default Image

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகே உள்ள பூலாம்பட்டியில் உதயசூரியன் என்பவர் வசித்து வருகிறார்.இவர் டெய்லர் வேலை பார்த்து வருகிறார்.இவரது மகள் மீனா.இவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக அவரது மகள் படித்து வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது பள்ளி படிப்பை படித்து முடித்துள்ளார்.பின்னர் திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை ஆங்கில பிரிவில் படிக்க சென்றுள்ளார்.

கல்லூரில் சேர்ந்த சில நாட்களிலே அவரது தந்தை காலமாகியுள்ளார்.இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மீண்டும் கல்லூரிக்கு சென்றுள்ளார்.பின்னர் மாலை வீட்டிற்கு செல்ல பேருந்திற்காக பெருமாள் கோவில் தெருவிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் மீனாவின் மீது ஆசிட் வீசி சென்றுள்ளார்.இதனால் அவரின் முகம் மற்றும் கைகள் சிதைந்துள்ளன.பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஆசிட் வீசிய இளைஞர் மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கூறி வழக்கை முடித்துள்ளனர்.ஆனால் மீனாவின் நிலைமை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.

இவரின் இந்த நிலையை பார்த்து பலரும் உதவுவதாக கூறி பின்னர் அதை அப்படியே விட்டுள்ளனர்.ஆனால் அவரின் அம்மாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.தனது பள்ளி செல்லும் மகனை பார்த்து கொள்ளும் நிலைமையில் மீனாதான் இருந்துள்ளார்.

ஆனால் தற்போது அவரின் அம்மா வீட்டு வேலைக்கு சென்று மகனை பார்த்து வருகிறார்.இந்நிலையில் அவரின் வாழ்க்கைக்காக அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்