குழந்தை சுஜித்திற்காக மாணவன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Default Image

கடந்த 25-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித், வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதனையடுத்து குழந்தையை மீட்பதற்கான பணிகள், 4 நாட்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
பலரின் போராட்டத்திற்கு மத்தியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை சடலமாகவே மீட்கப்பட்டது.  குழந்தையை உயிரோடு மீட்டு விடுவார்கள் என தமிழகமே மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போது, குழந்தை சடலமாக மீட்கப்பட்டது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.
குழந்தையின் மரணம் தமிழகத்தையே கலங்க வைத்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த செஸ் சாம்பியன்ஷிப் பிரக்யானந்தா, தான் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப்பில் வென்ற பட்டத்தை குழந்தை சுர்ஜித்திற்காக அர்பணித்துள்ளார்.
இதுகுறித்து பிரக்யானந்தா கூறுகையில், ‘ இதுபோன்ற சம்பவம் இனி வேறு எந்த குழந்தைகளுக்கும் நடக்காது என்று நம்புவோம். நான் என் பட்டத்தை சுர்ஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன்.’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்