திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்துள்ள வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை காணவில்லை என, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி வீட்டில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் மாணவியின் காலணி இருந்ததை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார்.
அதைத்தொடர்ந்து உடனே மாணவியின் பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அங்கு தேடியபோது புதருக்குள் மாணவி வாய், கால்கள் துணியால் கட்டப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து மாணவி கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதிக்குமார் என்ற இளைஞரும், மாணவியும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், மாணவி வேறொருவருடன் பழகி வந்ததால் மதிக்குமார் கண்டித்துள்ளார். ஆனால் இதை மாணவி கேட்காததால், காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…