முசிறியில் மாணவர்கள் மோதல் – ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

Default Image

மாணவர் மவுலிஸ்வரன் உயிரிழந்த விவகாரத்தில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியும் பால சமுத்திரத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள மாணவர்கள் பலரும் பயின்று வருகின்றனர்.

மாணவர்களிடையே மோதல் 

இந்த நிலையில், தோளூர்பட்டியை சேர்ந்த கோபி என்பவரது மகன் மவுலிஸ்வரன் அந்த பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அவரோடு பயின்று வந்த சக மாணவர்கள், சிறு சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மவுலிஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாக நினைத்த சகா மாணவர்கள் 3 பேர் அவரை தாக்கியுள்ளனர். மாணவர்கள் தாக்கியதில், மவுலிஸ்வரன் பலத்த காயமடைந்தார். உடனடியாக ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மவுலீஸ்வரனை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மாணவர் உயிரிழப்பு 

death 1

அந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மாணவர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சஸ்பெண்ட் 

இதனையடுத்து, 10ம் வகுப்பு மாணவர் மவுலீஸ்வரன் உயிரிழந்த சம்பவத்தில், தலைமையாசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர்கள் ராஜேந்திரன், வனிதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி 

ANBIL MAHESH DMK

இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாலசமுத்திரம் அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் கொலையில், உடன் படித்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தலைமை ஆசிரியை ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், வனிதா ஆகியோர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பணியின் போது  குறைவாக இருந்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்