மாணவர்கள் பேருந்துகளில் இன்று முதல் கட்டணமின்றி பயணிக்கலாம்..!

Published by
murugan

இன்று முதல் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை இலவசமாக பயணிக்கலாம் .

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், கோவிட்-19 கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள் வரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்பைடையில், பள்ளி மற்றும் அரசு கல்லூரிகள் வரும் 01.09.2021 முதல் திறக்கப்பட உள்ளது.

எனவே, 2021-22 கல்வியாண்டில், மாணவர்/மாணவியர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் புகைப்படத்துடன் சீருடை அல்லது கூடிய அடையாள பள்ளிகளில் வழங்கப்பட்ட அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே போன்று. அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government ITI, Government College. Government Polytechnics) பயிலும் மாணவ / மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையா அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

28 minutes ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

53 minutes ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

2 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

2 hours ago

ஈரோடு கிழக்கு : “வாக்கு சேகரிப்பதை விட ‘இது’ தான் முக்கியம்” முதலமைச்சர் போட்ட உத்தரவு!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தலில் திமுக…

3 hours ago

Live : இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…

4 hours ago