இனி மாணவர்கள் தப்ப முடியாது…!1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை …!அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
டிசம்பர் மாதத்திற்குள் மாணவர்களின் வருகையை கண்டறிய 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் மாணவர்களின் வருகையை கண்டறிய, டிசம்பர் மாதத்திற்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்.எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.