மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் – புதுவை பல்கலைக்கழகம் அறிவிப்பு.!
மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என புதுவை பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரனமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகள் நடத்தப்பட முடியாமல் போனதால் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்வதாக பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. ஆனால் கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்ட்டர் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதியை மாற்றி புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிதுள்ளது. இதற்கு முன்பு இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் 14 முதல் நடைபெறுவதாக இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் தற்போது செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் நடத்தப்படுகிறது.
புதுவை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இறுதி பருவத்தேர்வு எழுத ஆன்லைன், ஆப்லைன் என மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்கள் தங்கள் புத்தகத்தை பார்த்து எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் ஏ4 தாளில் தேர்வு எழுதி முடித்த பின் 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து அவர்களது கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.