மாணவர்கள் விருப்பப்பட்டால் மூன்றாவது மொழியை கற்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர்
இருமொழிக்கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும். அதேசமயம் மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை கற்கலாம். ஆனால், கட்டாயப்படுத்தக்கூடாது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் உள்ளார். இருமொழிக்கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும். அதேசமயம் மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை கற்கலாம். ஆனால், கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏதாவது ஒரு மொழியை கற்கலாம். சர்வதேச அளவில் ஆங்கிலமும், மாநில அளவில் தமிழும் உள்ளன என தெரிவித்துள்ளார்.