திருவாரூரில் வீட்டு பின்புற வயலில் மாணவி சடலம் கண்டெடுப்பு!

திருவாரூர் அருகே வீட்டின் பின்புறம் உள்ள வயலில் மௌனிகா எனும் 17 வயது மாணவி காயங்களுடன் சடலமாக மீட்பு.
திருவாரூரிலுள்ள மாவட்டமாகிய மகிழஞ்சேரியில் வசித்து வரும் செந்தில் குமாரின் 17 வயது பள்ளி பயிலும் மகள் தான் மௌனிகா. கிராம மக்கள் காலையில் வயலுக்கு சென்ற பொழுது மௌனிகா வயலில் சடலமாக கிடந்துள்ளார்.
அப்பொழுது ஆராய்ந்ததில் உடலில் காயங்களுடன் அவர் இறந்து கிடந்ததை அறிந்த மக்கள் வீட்டினருக்கு தகவல் அளித்துள்ளனர். இது அறிந்து அங்கு வந்த மௌனிகாவின் தந்தை செந்தில் குமார் காயங்களுடன் மகள் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், போலீசார் காயங்களுக்கான காரணம் மற்றும் தடயங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றதோடு, வழக்கு தொடர்ந்தும் உள்ளனர். சிறுமி காயங்களுடன் வயல் வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025