மாணவர்களே ரெடியா! டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள்.. பள்ளிக்கல்வித்துறை

half year exam

தமிழகத்தில் டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடைபெறும் என அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

அதன்படி, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் டிச.22ம் தேதி வரையும், 6 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர்.11-ஆம் தேதி முதல் டிச.21 ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்புக்கு மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரையாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

இதனிடையே, தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதன்படி,  10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி, ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

மேலும், 11-ஆம் வகுப்புக்கு மார்ச் 4ல் தொடங்கி 25ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். இதுபோன்று, மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி, 22ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே மாதத்தில் 10ம் தேதி முதல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்