மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தவில்லை – தமிழக அரசு
பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரடியாக வர கட்டாயப்படுத்தவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதில், நாளை முதல் முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், அனைத்து கல்லூரிகளும்நாளை முதல் திறக்கப்படவுள்ளது.
பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரடியாக வர கட்டாயப்படுத்த படவில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்படும், இணையவழியில் பாடங்கள், வகுப்புகள் பகிரப்படும் என்றும் கூறியுள்ளது. பல்துறை நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது என்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது.