மதுரை அரசு பள்ளி அருகே புதிய டாஸ்மாக் கடை.! சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்.!
மதுரை அரசு பள்ளி அருகே அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
மதுரை நகரில் தும்மக்குண்டு எனும் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகே அண்மையில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை ஒன்று அமைக்கப்பட்டுளள்து.
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் அது பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால், அந்த கடையை நீக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.