தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
2003-ல் 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பயனாளிகள் எண்ணிக்கை 100லிருந்து 200 ஆகவும், பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிதியுதவியை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தாலும், வரிய நிலையில் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் சிறப்பினமாக கருதி தொழிற்கல்வி உதவித் தொகை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…