நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்…!
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.
இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும் கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார்.
ஆனால், அந்த இரண்டு முறையும் அவர் தேர்வில் தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார். இந்நிலையில், இரவு 1 மணி வரை தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த தனுஷ், இரவு 1 மணிக்கு மேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வால் தற்கொலை தொடர்ந்து வரும் நிலையில், அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அக்கிராமத்து மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.