சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதத்தில் இது 3-வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்டை சேர்ந்த ரஞ்சனா குமாரி என்னும் மாணவி சென்னை ஐஐடியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் ரஞ்சனாவின் விடுதி அறையின் கதவு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற ஊழியர்கள், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி அதிதி சிம்ஹா என்ற பேராசிரியை தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக செப்டம்பர் 22-ம் தேதி சாஹல் கொர்மாத் என்ற பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 4 ஆண்டுகளில் சென்னை ஐஐடி வளாகத்தில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…