மாணவர் தற்கொலை..”நீட்”உயிர்க்கொல்லி தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்…அன்புமணி ராமதாஸ் காட்டம்.!!

AnbumaniRamadoss About

நீட் தேர்வுக்கு முடிவு கட்டவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ள்ளார். 

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்று முடிந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக புதுவை அண்ணா நகரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியை கண்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும்,  ஹேமச்சந்திரனின்  குடும்பத்தினருக்கும்  இரங்கலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டரில்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியுள்ளதாவது ” நீட் தேர்வு தோல்வி பயத்தால் புதுவை மாணவர் தற்கொலை வேதனையளிக்கிறது. அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீர் தேர்வுக்கு அஞ்சி தமிழ்நாட்டில் 60-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வால் இனி எவரும் உயிரிழக்கக் கூடாது.

அதை உறுதி செய்யும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் 454 நாட்களுக்கு முன் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும். புதுவைக்கும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மருத்துவப் படிப்பை விட மனித உயிர் மேலானது என்பதால், நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்