மாணவர் கிருபா மோகன் நீக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிருபா மோகன் என்ற மாணவர் சென்னை பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தவர். பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் சில நாட்கள் வகுப்புகளுக்குச் சென்று வந்தநிலையில்,அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் செயல்பட்டார் என்பதற்காக அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது கல்லூரி நிர்வாகம். அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தில் இயங்கியதாக கூறி தம்மை நீக்கிவிட்டதாக மாணவர் கிருபா மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அதில், மாணவர் கிருபா மோகன் நீக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் செப்டம்பர் 24-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…