தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் தீக்சித் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் தீக்சித் பலியானார். ணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, வாகன பொறுப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவன் உயிரிழப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் குறிப்பில் ‘சென்னை ஆழ்வார் திருநகர் தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் தீக்ஷித் பள்ளிவாகனம் ஏறி உயிரிழந்தான் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். சிறுவனை இழந்து வாடும் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளி வளாகத்திற்குள்ளேயே விபத்து ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்குதான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. பொதுவாக, தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஓய்வு வயது என்பது அதிகபட்சம் 60. இந்த நிலையில், கண் பார்வை முக்கியம் என்றிருக்கக்கூடிய ஓட்டுநர் பதவிக்கு 64 வயது உடைய நபரை பணியில் வைத்திருப்பது என்பது விதி மீறிய செயலாகும். மேலும் வாகனங்களிலிருந்து இறங்கும் மாணவ, மாணவிகளை வகுப்பறைக்குள் பத்திரமாக அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை. இதனை மேற்கொண்டிருந்தால் சிறுவனின் உயிரிழப்பு தடுக்கப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…