சென்னை வியாசர்பாடி: முன்விரோதம் காரணமாக மாணவர் கொலை.! 5 பேர் கைது

சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை.
சென்னை வியாசர்பாடி சின்னத்தம்பி தெருவில் வசித்து வருபவர் முருகன் இவருடைய மகன் பிரசாத் இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்தார், மேலும் இவர் மீது காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது சரித்திரப் பதிவு ஒரு குற்றவாளி எனவும் இவரைக் கூறலாம் ,
இந்த நிலையில் பிரசாத்தின் தாயார் விநாயகி மீன் வியாபாரம் செய்து வருகிறார், மேலும் விநாயகி காசிமேட்டிற்கு சென்று அதிகாலையில் மீன் வாங்க செல்வது வழக்கம் அவரை அழைத்துவர நேற்று பிரசாத் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தேசிய நகரை சேர்ந்த பாலசந்துரு என்பவர் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
மேலும் வெட்டியவுடன் பிரசாத்தின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் அனைவரும் விரைந்து வந்தனர், ஆனால் வெட்டிய கும்பல் அங்கிருந்து ஓடினர், இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த பிரசாத் உயிருக்கு போராடி இரத்த வெள்ளத்தில் இருந்தார், அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனாலும் வழியில் பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணையில் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் மற்றும் பலசந்துருவை தேடி வருகின்றன்றனர், மேலும் இந்த முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட வழக்கில் வியாசர்பாடியைச் சேர்ந்த சந்துரு, சாதகர் மற்றும் பரத், சாக்ரடீஸ் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025