ரஷ்ய தாக்குதலில் மாணவர் உயிரிழப்பு- ராமாதாஸ் இரங்கல்..!
ஆபத்தான அந்த நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் விரைந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ராமாதாஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மாணவர் நவீன் உயிரிழப்பை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமாதாஸ் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் கர்நாடகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார் என்பதையறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் கியெவ் மற்றும் கார்கிவ் நகரிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேற முடியவில்லை என்று செய்திகள் வெளிவருகின்றன. ஆபத்தான அந்த நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் விரைந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
1.உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் கர்நாடகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார் என்பதையறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.#NaveenShekharappa
— Dr S RAMADOSS (@drramadoss) March 1, 2022