கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், மாணவியின் தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கத்தில் இருந்த நிலையில், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையயடுத்து உறவினர்கள் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…