டிக் டாக்கில் கிளிகளை பேச வைத்து வீடியோ வெளியிட்ட மாணவனுக்கு அபராதம்.!
டிக் டாக்கில் கிளிகளை பேசவைத்து வீடியோ வெளிட்ட பள்ளி மாணவனுக்கு வனத்துறையினர் ரூ. 5000 அபராதம் விதித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சின்ன வீரசங்கிலி கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் கிளிகளை பிடித்து வளர்த்து வந்தார். மேலும் அந்த கிளிக்கு பேசும் பயிற்சி கொடுத்து அந்த கிளிகள் பேசுவதை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டு வந்தார். கேலி பேசுவதை வைரலானது இதை பார்த்த பலர் மாவட்ட வன அலுவலருக்கு புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மாணவன் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்ற வழக்கு பதிவு செய்து ரூபாய் 5,000 அபராதம் விதித்தனர். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்.
இனிமேல் கிளிகள் உள்ளிட்ட எந்த வன விலங்குகளும் துன்புறுத்த மாட்டேன் என டிக் டாக்கில் பதிவிட வேண்டும் என வன அலுவலர்கள் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து மாணவன் டிக்டாக்கில் வன விலங்குகளை துன்புறுத்த மாட்டேன் என கூறியுள்ளார்.