மாணவி பாத்திமா மரணம் ! உயர் விசாரணை கோரி திருமாவளவன் மனு
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக உயர் விசாரணை கோரி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன் மனு அளித்துள்ளார்.
கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை உள்ள ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாத்திமா மரணம் தொடர்பாக உயர் விசாரணை கோரி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன் மனு அளித்துள்ளார்.