பொறியியல் படிப்புக்கான சேர்க்கை ஆன்லைன் வழியே பதிவு செய்ய வருகின்ற ஜூன் 10-ம் தேதியில் இருந்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், நடைபெறாமல் இருந்த 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
மேலும், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். தற்போது, கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கல்லூரிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் 1,72,148 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக நேற்று கே.பி. அன்பழகன் கூறினார்.
இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான சேர்க்கை ஆன்லைன் வழியே பதிவு செய்ய வருகின்ற ஜூன் 10-ம் தேதியில் இருந்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…